இந்தியா ஒரு சிறந்த தலைவரை இழந்துவிட்டது: கோபிநாத் முண்டே மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்

By செய்திப்பிரிவு

இந்தியா ஒரு சிறந்த தலைவரை இழந்துவிட்டது என மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்: "மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மறைவு குறித்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான முண்டே, கட்சியில் பல்வேறு உயர் பதவிகளை வகித்து வந்தார்.அவரது மறைவு மகாராஷ்டிர மக்களுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு.

அவரது மறைவு மூலம் இந்திய மக்கள் குறிப்பாக மகாராஷ்டிர மாநில மக்கள் ஒரு நல்ல தலைவரை, ஒரு சிறந்த மனிதாபிமானியை, ஒரு உண்மையான தேசியவாதியை, சமுதாயத் தொண்டாற்றிய நபரை இழந்து விட்டனர்.

அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, இந்த துயரத்தில் இருந்து வெளிவர எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு வலிமையைத் தர வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்