புதுச்சேரியில் தேமுதிக போட்டியிடும் 30 தொகுதிகளில் 16 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது. இதைத்தொடர்ந்து, புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிடுகிறது என மாநில செயலர் வி.பி.பி வேலு தெரிவித்தார்.
இதையடுத்து முதற்கட்டமாக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று(மார்ச் 31) தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மண்ணாடிப்பட்டு தொகுதியில் எஸ்.மணிகண்டன், திருபுவனை(தனி) தொகுதியில் விநாயகமூர்த்தி, மங்களம் தொகுதியில் பச்சையப்பன், வில்லியனூர் தொகுதியில் பாசில், உழவர்கரை தொகுதியில் ழில்பேர், கதிர்காமம் தொகுதியில் மோட்சராஜன், காமராஜ் நகர் தொகுதியில் நடராஜன், முத்தியால்பேட்டை தொகுதியில் அருணகிரி, உருளையன்பேட்டை தொகுதியில்
» போபால், இந்தூரில் இரவு நேர ஊரடங்கு?- கரோனா போகவில்லை, கவனம் தேவை: சிவராஜ் சிங் சவுகான் எச்சரிக்கை
» பாஜக வேட்பாளர்களாக சுரேஷ் கோபி, முரளிதரன்?- விறுவிறுப்படையும் கேரள தேர்தல் களம்
கதிரேசன், நெல்லித்தோப்பு தொகுதியில் பூவராகவன், அரியாங்குப்பம் தொகுதியில் லூர்துசாமி, மணவெளி தொகுதியில் திருநாவுக்கரசு, நெட்டப்பாக்கம் தொகுதியில் முருகவேல், காரைக்கால் வடக்கு தொகுதியில் வேலுச்சாமி, காரைக்கால் தெற்கு தொகுதியில் ஜெகதீசன், நிரவி திருப்பட்டினம் தொகுதியில் அருள்ராஜி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago