சிவகங்கையில் அமைச்சர் ஜி.பாஸ்கரனுக்கு சீட் கொடுக்காததைக் கண்டித்து அரசு வழக்கறிஞர் வைரமணி பதவியைத் துறந்துள்ளார். மேலும் அதிமுக மாவட்டச் செயலாளரும், வேட்பாளருமான செந்தில்நாதன் எதிர்ப்பாளர்களையும் அமைச்சர் ஆதரவாளர்கள் ஒருங்கிணைத்து வருகின்றனர்.
சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் தனக்கு தான் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஓராண்டிற்கு முன்பே அமைச்சர் ஜி.பாஸ்கரன் தேர்தல் பணிகளை தொடங்கினார். ஆனால் அவருக்கு திடீரென சீட் மறுக்கப்பட்டு, தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதனுக்கு சீட் வழங்கப்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த அமைச்சர் ஆதரவாளர்கள், வேட்பாளரை மாற்ற வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து சென்னையில் இருந்து சிவகங்கை வந்த செந்தில்நாதனையும் அமைச்சர் ஆதரவாளர்கள் வரவேற்கச் செல்லாமல் புறக்கணித்தனர்.
இந்நிலையில் அமைச்சருக்கு ஆதரவாக சிவகங்கை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞர் எம்.வைரமணி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியிடம் அளித்தார்.
» அமாவாசை நாளில் பிரச்சாரத்தைத் தொடங்கினார் அரியலூர் அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன்
» திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது: மிகப்பெரிய இலவச அறிவிப்புக்கு வாய்ப்பு
மேலும் செந்தில்நாதன் 8 ஆண்டுகளாக தொடர்ந்து மாவட்டச் செயலாளராக உள்ளார். அவரால் கட்சி பதவி இழந்தவர்கள், பதவி கிடைக்காதவர்கள், ஒப்பந்தம் பெற முடியாதவர்கள் ஆகியோரையும் அமைச்சர் ஆதரவாளர்கள் ஒருங்கிணைத்து வருகின்றனர். இதனால் சிவகங்கை தொகுதியில் அதிமுகவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago