ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக பிரச்சாரம்: ராஜவர்மன் ஆதரவாளர்கள் திட்டம்

By இ.மணிகண்டன்

சட்டப்பேரவைத் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக் கோட்டை, ராஜபாளையம், திருச்சுழி தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சிவகாசி மற்றும் வில்லிபுத்தூர் தொகுதிகளும் சாத்தூர் தொகுதி மதிமுக வுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், திமுக போட்டியிடும் 4 தொகுதிகளிலும், கடந்த தேர்தலிலும் அக்கட்சி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று ராஜபாளையம், அருப் புக்கோட்டை, சாத்தூர், வில்லிபுத்தூர், சிவகாசி தொகுதிகளில் அதிமுகவும், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக விருதுநகர் தொகுதியிலும், மூவேந்தர் முன்னணிக்கழகம் திருச்சுழியிலும் போட்டியிடுகின்றன. இதில் ராஜபாளையம் மற்றும் அருப்புக்கோட்டை தொகுதிகளில் மட்டும் திமுகவும், அதிமுகவும் நேரடிப் போட்டியில் களம் இறங்குகின்றன. கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று அமைச்சரான கே.டி.ராஜேந்திரபாலாஜி தொகுதி மாறி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அமமுக வேட்பாளர்

சாத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று எம்எல்ஏ ஆன ராஜவர்மன் தனக்கு அதிமுகவில் வாய்ப்பு தராததால் அமமுகவில் இணைந்தார்.

தற்போது அமமுக வேட்பாளராக சாத்தூர் தொகுதியில் மீண்டும் அவரே இத்தேர்தலில் களமிறங்குகிறார்.

அதோடு ராஜவர்மனின் ஆதரவாளர்கள் ராஜபாளையம் பகுதியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான பிரச் சாரத்தில் ஈடுபடுவர் என்பது குறிப்பிடத் தக்கது.

ராஜபாளையம் தொகுதியில் வலுப்பெற்று உள்ள திமுக, தனது வாக்குவங்கியைச் சிதறாமல் வைத்துள்ளது. மேலும், சாத் தூர் தொகுதியிலும் ராஜவர்மனுக்கு உள்ள செல்வாக்கு காரணமாக, அதிமுகவின் பலம் குறைந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எம்ஜிஆர் மன்றச் செயலர் விலகல்

மேலும், விருதுநகர் தொகுதியில் கரோனா காலத்தில் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி களை வழங்கிய மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலர் கோகுலம் தங்கராஜும் தனக்கு வாய்ப்புக் கிடைக்காத விரக்தியில் அமமுகவில் இணைந்துள்ளார்.

இதனால், விருதுநகர் தொகுதியிலும் அதிமுகவின் வாக்கு வங்கி பிரியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு, திருச்சுழி தொகுதியிலும் இம்முறை மூமுகவைச் சேர்ந்த பிரபலம் இல்லாத வேட்பாளரால், அத்தொகுதியில் போட்டியிடும் ‘சிட்டிங்' எம்எல்ஏ தங்கம் தென்னரசுவுக்கு பலத்த போட்டி இருக்காது என நடுநிலையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்