டெல்லி அரசியலுக்குச் செல்வீர்களா என்ற கேள்விக்குக் குஷ்பு பதிலளிக்கும் முன் குறுக்கிட்ட பாஜக தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன், 'யாருக்கு என்ன பொறுப்பு என்பதைக் கட்சி மேலிடம் முடிவு செய்யும்' என்று தெரிவித்தார்.
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட பாஜக முடிவு செய்தது. இதற்காகப் பல மாதங்களுக்கு முன்னரே குஷ்பு அங்கு தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டார். குஷ்பு அங்கு தேர்தல் பணிமனையை உருவாக்கி, தினமும் வந்து அமர்ந்து தொண்டர்களின் குறைகளைக் கேட்டார்,
இதற்கிடையே பாமகவுக்கு சேப்பாக்கம் / திருவல்லிக்கேணி தொகுதி என்று அதிமுக அறிவித்தது. இது பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து குஷ்புவிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், ''நான் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்ததாக என்றுமே கூறியதில்லை. தேர்தல் பொறுப்பாளராக நான் என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் சேப்பாக்கம்/ திருவல்லிக்கேணி தொகுதியில் செய்திருக்கிறேன். எனக்குத் தேர்தலில் போட்டியிட சீட் என்ற நம்பிக்கையில் நான் கட்சிக்கு வரவில்லை. கட்சி மீது நம்பிக்கை வைத்துத்தான் பாஜகவுக்கு வந்திருக்கிறேன்.
» அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ போட்டியிடும் 6 வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு
» சுதந்திர உணர்வு புதுச்சேரியின் ஒவ்வொரு துகளிலும் இருக்கிறது: ஆளுநர் தமிழிசை பேச்சு
இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெல்லும். தமிழகம் முழுவதும் இதற்காகச் சுற்றுப்பயணம்செய்ய உள்ளேன். தேர்தல் பிரச்சாரத்துக்காக மேற்கு வங்கம், அசாம் கூடச் செல்கிறேன்'' என்று குஷ்பு தெரிவித்தார்.
இதற்கிடையில் பேசிய வானதி சீனிவாசன், ''தேசிய மகளிர் அணித் தலைவியாகச் சொல்கிறேன். 5 மாநிலத் தேர்தல் பிரச்சாரத்துக்கும் குஷ்புவை அழைக்கிறோம். குஷ்புவுக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று யார் சொன்னது? நீங்களே (ஊடகங்கள்) உற்பத்தி செய்து கொள்கிறீர்கள். எந்த நிலையிலும் கட்சித் தலைமை முடிவு செய்து அறிவிக்கும். அதுவரை பொறுமையாக இருங்கள்'' என்று தெரிவித்தார்.
டெல்லி அரசியலுக்குச் செல்வீர்களா என்று குஷ்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, குஷ்பு பதில் கூற எத்தனித்தார். அப்போது குறுக்கிட்ட வானதி, ''அது கட்சி முடிவு செய்யும். யாருக்கு டெல்லி, யாருக்கு என்ன பொறுப்பு என்பது தலைமைக்குத் தெரியும்'' என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago