கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்; முதன்முறையாக தேர்தலில் களம் காண்கிறார்

By செய்திப்பிரிவு

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.

மக்கள் நீதி மய்யம் அதிமுக, திமுக இல்லாமல் மூன்றாவது அணியாகத் தேர்தலில் நிற்கிறது. மக்கள் நீதி மய்யத்துடன் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும், இந்திய ஜனநாயக கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன.

முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் ஏற்கெனவே வெளியான நிலையில், இன்று (மார்ச் 12) இரண்டாம் கட்ட பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி தெரியவரும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி, சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மநீம 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று கமல்ஹாசன் வெளியிட்டார். அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதன்மூலம், முதல்முறையாக தேர்தலில் களம் காண்கிறார் கமல்ஹாசன்.

கோவை தெற்கு தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

எனினும், அங்கு பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோன்று, பிரதான கட்சியான திமுக சார்பில், கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்