பொள்ளாச்சி அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டி வைகை நகர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். இவரை இளங்கோ கார்த்திக் (24) என்பவர் மே 31-ம் தேதி தனது வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையறிந்த சிறுமியின் பெற்றோர் இளங்கோ கார்த்திக்கின் பெற்றோரிடம் கூறிய போது, இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சிறுமி தீக்குளித்தார்.
பலத்த காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி புதன்கிழமை இறந்தார்.
இவ்வழக்கு தொடர்பாக சிறுமி அளித்த வாக்குமூலம், அவரது பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் இளங்கோ கார்த்திக், தந்தை குணசேகரன், தாயார் லதா, உறவினர் ராஜலட்சுமி ஆகியோரை பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸார் ஏற்கனவே கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், சிறுமி இறந்ததையடுத்து 4 பேர் மீதும் தற்கொலைக்குத் தூண்டியதாக கூடுதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago