தென் மாவட்டங்களில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நாளை (மார்ச் 13) முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது. கோத்தகிரியில் அதிகபட்சமாக 12 செமீ மழை பதிவாகியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வளி மண்டலத்தில் காற்று சுழற்சி நிலவி வருகிறது. இது கேரள பகுதி வரை நீடிக்கிறது.இதன் காரணமாக 13-ம் தேதி முதல்15-ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும்புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்வறண்ட வானிலையே நிலவும். 11-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 12 செமீ, தென்காசி மாவட்டம் சிவகிரி, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஆகிய இடங்களில் தலா 9 செ.மீமழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்