கோவில்பட்டி தொகுதியில் 3-வது முறையாக களமிறங்கும் கடம்பூர் ராஜு

By சு.கோமதிவிநாயகம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில்அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 2-வது பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், தூத்துக்குடிமாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர்ராஜு,விளாத்திகுளத்தில் தற்போதைய எம்எல்ஏ போ.சின்னப்பன், ஓட்டப்பிடாரத்தில் பெ.மோகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கடம்பூர் ராஜுவின் (61) சொந்தஊர் கடம்பூரை அடுத்த கே.சிதம்பராபுரம். ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்துள்ள இவர், அதிமுகவில் தொடக்கம் முதலே உறுப்பினராகவும், சிதம்பராபுரம் அதிமுக கிளைச் செயலாளராகவும் இருந்துள்ளார். தொடர்ந்து, மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர், ஜெ. பேரவை செயலாளராக பதவிவகித்துள்ளார். தற்போது, வடக்குமாவட்ட அதிமுக செயலாளராகவும், தென்காசி வடக்கு மண்டல அதிமுக பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

2011-ம் ஆண்டு தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணியைச் சேர்ந்த பாமகவேட்பாளர் கோ.ராமச்சந்திரனை 26,480 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சட்டப்பேரவையில் காலடி எடுத்து வைத்தார்.தொடர்ந்து 2016-ம் ஆண்டு நடைபெற்றதேர்தலில் திமுக வேட்பாளர்அ.சுப்பிரமணியனை விட 428 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

நேற்று தொகுதிக்கு வந்த கடம்பூர் ராஜு சத்திரப்பட்டி டெல்லிபாலாஜி ரேணுகா தேவி கோயிலில் தரிசனம் செய்தார். கோவில்பட்டியில் உள்ள தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பிரச்சாரத்தை தொடங்கிய கடம்பூர் செ.ராஜு செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கோவில்பட்டி தொகுதியில் உள்ள 131 கிராமங்களுக்கும் தரமான சாலைகள், போக்குவரத்து, குடிநீர் வசதி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றிய மனநிறைவு உள்ளது. இதே நிலை தான் மக்களிடமும் காணப்படுகிறது. தமிழகத்திலேயே குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவுக்கு அதிகமான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக கோவில்பட்டி இருக்கும்’’ என்றார்.

விளாத்திகுளம் தொகுதி

விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளராக போ.சின்னப்பன்(52) அறிவிக்கப்பட்டுள்ளார். கீழவிளாத்திகுளத்தை சேர்ந்தஇவர் 1980-ல் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்தார். தொடர்ந்து, மாவட்ட மாணவரணி அமைப்பாளர், இலக்கிய அணிஇணைச் செயலாளர் பதவிகளை வகித்துள்ளார். 2001 - 2006-ம் ஆண்டுவரை மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவராக பணியாற்றினார். 2006 முதல் 2011-ம் ஆண்டுவரை விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.2019-ம் ஆண்டு நடந்தஇடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது 3-வது முறையாக விளாத்திகுளம் தொகுதியில் களம் காண்கிறார்.

ஓட்டப்பிடாரம் தொகுதி

ஓட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளர் மோகனின்(45) சொந்த ஊர் கவர்னகிரி. மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர், மாவட்ட துணைச் செயலாளர் பதவிகளை மோகன் வகித்துள்ளார். தற்போது ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். 2006-ம் ஆண்டுஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏ வாக தேர்வு செய்யப்பட்டார். 2019-ல்நடந்த இடைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பைஇழந்தார். தற்போது 3-வது முறையாக போட்டியிட மோகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்