வேலூர் மாவட்டத்தில் சட்டப் பேரவை தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக் கான தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள 1,783 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபாட் இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்புப் பணிகள் முடிக் கப்பட்டு தயார் நிலையில் வைத் துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 2,140 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,140 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 2,296 விவிபாட் இயந்திரங்கள் உள்ளன. இவற்றை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் சட்டப் பேரவை தொகுதி வாரியாக பிரிக்கும் பணி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலை மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கணினி குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபாட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டன.
தொகுதி வாரியாக குலுக்கல்
காட்பாடி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 349 வாக்குச்சாவடிகளுக்கு தலா 419 வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவியும் 450 விவிபாட் இயந்திரமும், வேலூர் தொகுதியில் உள்ள 364 வாக்குச்சாவடிகளுக்கு தலா 437 வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவியும், 466 விவிபாட் இயந்திரமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அணைக்கட்டு தொகுதியில் உள்ள 351 வாக்குச்சாவடிகளுக்கு தலா 421 வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவியும், 453 விவிபாட் இயந்திரமும், கே.வி.குப்பம் தனி தொகுதியில் உள்ள 311 வாக்குச்சாவடிகளுக்கு தலா 373 வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவியும், 401 விவிபாட் கருவியும், குடியாத்தம் (தனி) தொகுதியில் உள்ள 408 வாக்குச்சாவடிகளுக்கு தலா 490 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவியும், 526 விவிபாட் இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தொகுதிக்கு அனுப்பி வைப்பு
சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்தந்த தொகுதிகளுக்கு அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று அனுப்பி வைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். தொகுதி வாரியாக துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாது காப்புடன் லாரிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வருவாய்த் துறையினர் பூட்டி ‘சீல்' வைத்தனர். பாதுகாப்பு அறைக்கு துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago