தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இழுபறியாக இருந்த தென்காசி தொகுதியை காங்கிரஸ் போராடி பெற்றுள்ளது. சென்னையில் வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளை கேட்டு கோரிக்கை வைத்தது. ஆனால் திமுக தரப்பில் 18 தொகுதிகள் எனக்கூற பேச்சு வார்த்தை கடும் இழுபறியானது. இதில் திமுக கூட்டணியில் தொடரலாமா என்கிற நிலைக்கு காங்கிரஸ் தலைவர்கள் யோசிக்க தொடங்கினர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் பேச்சுவார்த்தை நிறைவுபெற்று காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்குவது என முடிவானது.
திமுக காங்கிரஸ் இடையே கூட்டணி உறுதியானதை அடுத்து திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளும் கூட்டணியை உறுதிப்படுத்தின. இந்நிலையில் அடுத்தக்கட்டமாக காங்கிரஸ் கேட்கும் தொகுதியில் பல முட்டுக்கட்டைகள் வந்தன.
காங்கிரஸ் கேட்கும் தொகுதியில் ஏற்கெனவே வென்ற 8 தொகுதிகளில் 7 தொகுதிகளை அளிக்க திமுக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. முதுகுளத்தூர் தொகுதியில் ராஜக்கண்ணப்பன் போட்டியிட வாய்ப்புள்ளதால் அந்தத்தொகுதியை தர முடியாது என திமுக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது 25 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு உறுதியாகி உள்ள தொகுதிகள்:
1.பொன்னேரி, 2.ஸ்ரீபெரும்புதூர், 3.சோளிங்கர், 4.ஊத்தங்கரை, 5.ஓமலூர், 6.உதகமண்டலம், 7. கோவை தெற்கு, 8.காரைக்குடி, 9.மேலூர், 10.சிவகாசி, 11.திருவைகுண்டம், 12.குளச்சல் 13.விளவங்கோடு, 14. கிள்ளியூர், 15. ஈரோடு கிழக்கு, 16.தென்காசி, 17.அறந்தாங்கி, 18. விருதாச்சலம், 19.நாங்குநேரி, 20.கள்ளக்குறிச்சி, 21.திருவில்லிபுத்தூர், 22.திருவாடனை 23.உடுமலைப்பேட்டை, 24.மயிலாடுதுறை, 25.வேளச்சேரி
இவ்வாறு அந்த பட்டியலில் உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago