அரசியல் ரீதியாக திமுகதான் எங்கள் எதிரி என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சீமான் கூறுகையில், “அரசியல் ரீதியான எதிரியாக நாங்கள் திமுகவைப் பார்க்கிறோம். கருத்தியல் எதிரியாக நாங்கள் பாஜகவைப் பார்க்கிறோம். எங்கள் வேட்பாளர்கள் 3 மூன்று மாதங்களுக்கு முன்னரே தேர்தலுக்கான களப் பணிகளைத் தொடங்கிவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சிஏ.திடலில் நடந்த நிகழ்ச்சியில் 234 தொகுதிகளுக்கும் நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு தேர்தலிலும் பெண்களுக்குச் சரிசமமாகத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வரும் சீமான், வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் 117 பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். வழக்கம்போல இத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
» அசோக் செல்வன் - ப்ரியா பவானி சங்கர் இணையும் ஹாஸ்டல்
» நரகத்திலிருந்து வந்துவிட்டேன்: காங்கிரஸ் குறித்து புதுவை முன்னாள் எம்எல்ஏ ஜான்குமார்
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago