தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி இந்த மாதம் இறுதியில் புதுச்சேரி வருகிறார் என்று அம்மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சாமிநாதன் பத்திரிகையாளர்களிடம் இன்று கூறும்போது, “கடந்த மாதம் பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து மிகப் பெரிய எழுச்சி எற்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இம்மாத இறுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
பிரதமர் பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கூட்டணித் தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளனர். அது மாபெரும் எழுச்சி மற்றும் தேர்தல் வெற்றிக் கூட்டணியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி பிப்ரவரி 25ஆம் தேதி புதுச்சேரிக்கு வருகை தந்தார். ஜிப்மரில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்த பின்னர், லாஸ்பேட்டை விமான நிலைய சாலையில் நடைபெற்ற பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
» கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது மனிதத் தன்மையற்ற செயல்: உயர் நீதிமன்றம் வேதனை
» மோடி அரசின் ஆட்சி இருக்கும் வரை போராடத் தயார்: விவசாயிகள் தலைவர் நரேந்திர திகைத் பேட்டி
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago