மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் கட்டக்கோரி வழக்கு

By கி.மகாராஜன்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் கட்டக்கோரி தாக்கலான மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த பாஸ்கர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகம், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு 2015-ம் ஆண்டில் அறிவித்தது. தமிழகத்தில் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2018-ல் இடம் தேர்வு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

இருப்பினும் இதுவரை அந்த இடத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் கட்டி முடிக்கக்கோரி வழக்கு தொடர்ந்த போது, கட்டுமானப்பணி விரைவில் தொடங்கப்படும் என 2 ஆண்டுக்கு முன்பு மத்திய அரசு உறுதியளித்தது. இருப்பினும் இதுவரை சுற்றுச்சுவர் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

எனவே, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணியை துரிதப்படுத்தவும், எய்ம்ஸ் மருத்துவமனை குழுவில் சமூக ஆர்வலர்களை இணைக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர், மனுவை மதுரை எய்ம்ஸ் தொடர்பான மற்ற மனுக்களுடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு, விசாரணையை ஆக. 13-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்