ராமநாதபுரத்தில் தேசியவாத காங்கிரஸ் போட்டி?

By ராமேஸ்வரம் ராஃபி

ராமநாதபுரம் தொகுதியில் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டாக்டர் ராஜேஸ்வரன் போட்டியிடுவார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராகவும் தமிழகத் தலைவராகவும் இருப்பவர் டாக்டர் ராஜேஸ்வரன்.

காங்கிரஸ் கட்சியில் சிவாஜி ஆதரவாளராக இருந்த இவர், இரண்டு முறை எம்.பி-யாகவும், ஒருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகிக்கும் ராஜேஸ்வரன் மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளராம். 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவளித்தது. ஆனால், வருகிற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக அணியில் இருப்பதா அல்லது காங்கிரஸ் அணியில் நீடிப்பதா என கட்சியின் அகில இந்திய தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாம். ஒருவேளை, இவ்விரு கட்சிகளோடும் கூட்டணி இல்லை என்றாலும் ராமநாதபுரத்தில் டாக்டர் ராஜேஸ்வரன் போட்டியிடுவது உறுதி என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

52 secs ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்