திமுக கூட்டனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொகுதி பங்கீடு இழுபறி முடிவுக்கு வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாகவும், இரு கட்சிகளுக்கு இடையேயும் இன்று காலை 11 மணிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகள் அக்கட்சி ஒதுக்கிய தொகுதிகளை எற்றுக் கொண்டுள்ளன.
25 தொகுதிகளை காங்கிரஸும், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா 6 தொகுதிகளையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளையும் பெற்றுக்கொண்டன.
அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி பெறுவதை தடுக்க ஒரே வழி திமுகவுடன் கூட்டணி வைப்பது மட்டும்தான் என்ற முடிவுக்கு கூட்டணி கட்சிகள் வந்ததால் கூட்டணிக் கட்சிகள் பெரிதும் பேரமின்றி வழங்கப்பட்ட தொகுதிகளை ஏற்றுக்கொண்டுள்ளன.
» புதுச்சேரி காங்கிரஸ் செயல் தலைவர் ஆறுமுகம் என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தார்
» 234 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் திமுகவுடன் தொடர்ந்து பிடிவாதமாகப் பேசி வந்தது. கூட்டணியில் விரிசல் ஏற்படாமல் திமுக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுக வழங்கு 6 தொகுதிகளை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இன்று காலை 11 மணியளவில் இரு கட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவுடன் இன்று தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துகின்றன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago