ரயில் இன்ஜின்களில் கழிப்பிட வசதி தேவை: உலக மகளிர் தினத்தில் பெண் ஓட்டுநர்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

ரயில் இன்ஜின்களில் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றுபெண் ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரம்மாண்ட பொதுத் துறைநிறுவனமான இந்திய ரயில்வேயில், ரயில் ஓட்டுநர்களாக (பைலட்)மட்டும் 75 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். காலத்துக்கு ஏற்ப,ரயில்கள், ரயில் நிலையங்களில் பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், ரயில்இன்ஜின்களில் இன்னும் கழிப்பிட வசதி இல்லாதது ஓட்டுநர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.

சமீபகாலமாக இந்திய ரயில்வேயில் பெண் ஓட்டுநர்கள் அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர். கடந்த 2020 மார்ச் மாதத்தில் முதல்முறையாக 1,280 பெண்கள் தேர்வுசெய்யப்பட்டு, பணியாற்றி வருகின்றனர். அதன்பிறகும், ரயில் இன்ஜின்களில் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்படவில்லை.

இதுகுறித்து பெண் ஓட்டுநர்கள் கூறியபோது, ‘‘குறுகிய தூரரயில்களில் பணியாற்றினாலும், ரயில் இன்ஜின்களில் கழிப்பிட வசதி இல்லாதது கஷ்டமாக உள்ளது.ரயில்வே நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகமகளிர் தினத்தை முன்னிட்டு இதைஎங்கள் கோரிக்கையாக முன்வைக்கிறோம்’’ என்றனர்.

இதுபற்றி அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர்கள் கழகத்தின் தென்மண்டல தலைவர் வி.பாலசந்திரன் கூறும்போது, ‘‘ரயில்வேயில் பல புதிய வசதிகள்வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், ரயில் இன்ஜின்களில் கழிப்பிட வசதி இல்லாததால், பெரிதும்அவதிப்படுகிறோம். புறநகர் மின்சார ரயில்களில் ஓட்டுநர்கள்ஓய்வின்றி பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது. சமீபகாலமாக பெண் ஓட்டுநர்கள் அதிக அளவில்பணியில் சேர்ந்து வருகின்றனர். எனவே, விமானங்களில் இருப்பதுபோல, ரயில் இன்ஜின்களில் பயோ கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்