புதுச்சேரி காங்கிரஸ் செயல் தலைவர் ஆறுமுகம் என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தார்

By செ.ஞானபிரகாஷ்

ரங்கசாமியிடம் போட்டியிட்டு தோல்வியைத் தொடர்ந்து சந்தித்துவந்த காங்கிரஸ் செயல் தலைவர் ஏ.கே.டி. ஆறுமுகம், அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் ரங்கசாமியை சந்தித்து என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

புதுச்சேரியில் இந்திராநகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை எதிர்த்து தொடர்ந்து இந்திரா நகர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து தோல்வியை தழுவி வந்தவர் காங்கிரஸ் செயல் தலைவர் ஏ.கே.டி. ஆறுமுகம். நாராயணசாமிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த இவர் ரங்கசாமியை எதிர்த்து இம்முறை காங்கிரஸில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸிலிருந்து தொடர்ந்து பலரும் விலகி வந்த சூழலில் ஏ.கே.டி. ஆறுமுகம் சில தினங்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களிடம் கருத்துகளைக் கேட்டார்.

அதைத்தொடர்ந்து அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கு இன்று இரவு ஏ.கே.டி. ஆறுமுகம் தனது ஆதரவாளர்களுடன் சென்று ரங்கசாமியை சந்தித்து என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தார்.

இந்நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில், "புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.கே.டி. ஆறுமுகம், காங்கிரஸ் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வேறு ஒரு கட்சிக்கு மாறும் முயற்சியை எடுத்ததால் காங்கிரஸ் கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்குகின்றோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்