கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் தொழில் துறையினரின் கோரிக்கை இடம்பெறுமா?

By பெ.ஸ்ரீனிவாசன்

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் தொழில் துறையினரின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கோவையைச் சேர்ந்த தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவையில் இயந்திர உதிரிபாகங்கள், பம்ப்செட், கிரைண்டர், ராணுவ தளவாட உதிரி பாகங்கள், ஜவுளி இயந்திரங்கள் எனஏராளமான உற்பத்தித் தொழிற்சாலைகள் உள்ளன. சிறு, குறுமற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மட்டும் 1.50 லட்சத்துக்கும் மேல் உள்ளன. இவற்றில் சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

இதனால், கோவைக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்த பிரதமர் மோடி, ராகுல் காந்தி, முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர், கோவையில் தொழில் துறையினரைச் சந்தித்து, அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

‘‘ஒவ்வொரு தேர்தலின்போதும் கட்சித் தலைவர்கள் எங்களை சந்தித்தாலும், அக்கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் எங்கள்கோரிக்கைகள் இடம்பெறுவதில்லை’’ என்று கூறும் தொழில்துறையினர், இந்த முறையாவது அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் கோவை தொழில் துறையினரின் கோரிக்கைகள் இடம் பெற வேண்டும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து குறு தொழில்முனைவோருக்கான `டேக்ட்' அமைப்பு தலைவர் ஜே.ஜேம்ஸ் கூறும்போது, ‘‘கோவையைச் சேர்ந்த தொழில் துறையினரின் கோரிக்கைகளை, 19 தொழில்அமைப்புகளைக் கொண்ட கூட்டமைப்பு மூலம் அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தி வருகிறோம். குறுந்தொழில்களுக்கு தனி வாரியம், குறைந்த வட்டியில் கடனுதவி, சலுகைக் கட்டணத்தில் மின்சாரம் உள்ளிட்டவை எங்களது நீண்டகால கோரிக்கைகளாகும். தேசிய, மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகள், எங்களது கோரிக்கைகளை கட்சித் தலைமையிடம் எடுத்துக் கூறி, தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்ய வேண்டும்’’ என்றார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு கூறும்போது, ‘‘கோவை தொழில் துறையினரின் அனைத்து முக்கியக் கோரிக்கைகளையும் தலைமைக்கு எடுத்துக் கூறியுள்ளோம். தேர்தல் அறிக்கையில் அவை இடம்பெற வேண்டுமென தலைமையிடம் வலியுறுத்தி வருகிறோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்