மார்ச் 10-ல் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு ஏப். 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் இதுவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் பல கட்டங்களாக தொகுதிப் பங்கீடு குறித்து இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மார்ச் 10-ல் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஸ்டாலின் இன்று (மார்ச் 5) தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், "மார்ச் 7 இல் லட்சியப் பிரகடனம் வெளியீடு; மார்ச் 10-ல் திமுகவின் வெற்றி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; மார்ச் 11-ல் களத்தின் கதாநாயகனான திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு. அதன்பின் பரப்புரைப் பயணம் எனப் புயல் வேகத்தில் செயல்பட வேண்டிய பொறுப்பிலே இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago