தென், டெல்டா மாவட்டங்களை குறிவைக்கும் அமமுக

By என்.சன்னாசி

அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்துள்ளதால் அதிர்ச்சியடைந்த அமமுக தனது அடுத்தகட்ட நகர்வைத் தொடங்கியுள்ளது.

2019 மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அமமுக போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. கடந்தகால அனுபவத்தை மனதில்கொண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தி வெற்றிபெற அமமுக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

இது குறித்து மதுரை புறநகர் மாவட்டத்தை சேர்ந்த அமமுக முக்கிய நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

சசிகலா விடுதலைக்குப்பிறகு அதிமுக- அமமுக இணையவாய்ப்பு இருக்கும் எனக் கருதினோம். பிரிந்துள்ள அம்மாவின்தொண்டர்களை ஒருங்கி ணைத்து ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்கலாம் என சசிகலாவும் இரு முறை அழைப்பு விடுத்தார். இருப்பினும் முதல்வர், துணை முதல்வர் தரப்பில் இருந்து எதுவும் நடக்கவில்லை.

சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பது தற்காலிகமானதுதானே தவிர, எங்களைப் பொருத்தவரை நிரந்தரமல்ல. தேர்தலுக்குப் பிறகு அவர் கட்சியை வழி நடத்துவார் என்றநம்பிக்கை உள்ளது. சசிகலாவின் அரசியல் விலகல் எங்களுக்கு சற்று சோர்வு அளித்தாலும் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. கூட்டணி அமையவில்லையென்றால் தனித்துப் போட்டியிடுவோம்.

சுமார் 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் போட்டியிடுவோம். பிற மாவட்டங்களில் வெற்றிவாய்ப்புள்ள தொகுதியில் போட்டியிடுவோம். சசிகலாவின் ஆசியோடு வெற்றி பெறுவோம். ஜெயலலிதா ஆட்சியை அமைக்க முயற்சிப்போம் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்