தேமுதிக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் இன்று கோயம்பேட்டில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்திற்கு ஏப். 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு மட்டும் 23 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு, பிப். 27 அன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
அதிமுக கூட்டணியில் தங்களுக்கு முக்கியத்துவம் குறைவாக உள்ளதாக, தேமுதிக அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, பிப். 25 முதல் தேமுதிக விருப்ப மனுக்களைப் பெற்று வருகிறது. பொதுத் தொகுதிக்கு 15 ஆயிரம் ரூபாயும், தனித் தொகுதிக்கு 10 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுத் தாக்கல் நாளையுடன் (மார்ச் 5) நிறைவடைய உள்ளது.
இதற்கிடையே விருகம்பாக்கம் தொகுதிக்கு விஜயகாந்தும் தொகுதி குறிப்பிடாமல் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும் விருப்ப மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், தேமுதிக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தார். தொகுதிப் பங்கீடு நிறைவடையாத நிலையில், எந்தத் தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பதை விருப்ப மனுவில் குறிப்பிடவில்லை.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த விஜய பிரபாகரன், ''தொண்டர்கள் ஆசைப்பட்டதால் மனு தாக்கல் செய்துள்ளேன். இதுதொடர்பாக விஜயகாந்த், 'சென்று வா, வெற்றி நமதே!' என்று தெரிவித்தார். எந்தத் தொகுதியில் நான் நின்றாலும் என்னைத் தொண்டர்கள் ஜெயிக்க வைப்பார்கள்.
கூட்டணிப் பேச்சுவார்த்தையைக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் முடிவு செய்வார்கள். நான் வேட்பு மனு தாக்கல் செய்ய மட்டுமே வந்துள்ளேன்'' என்று விஜய பிரபாகரன் தெரிவித்தார்.
தேமுதிக சார்பாகப் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் வரும் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேர்காணல் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago