திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' 6-ம் கட்ட பிரச்சாரம், மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என, திமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்.6 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பரப்புரை, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன.
திமுக சார்பில், தேர்தலை முன்னிட்டு, மக்கள் கிராம சபைக் கூட்டங்கள், 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' ஆகிய பிரச்சார நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோன்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதில், அந்தந்த பகுதி பிரச்சினைகளை பொதுமக்கள் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துரைக்கின்றனர். மேலும், இதில், மு.க.ஸ்டாலின் அதிமுக அரசையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் தமிழக அமைச்சர்களையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இதுவரை, பல்வேறு மாவட்டங்களில் இப்பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள ஸ்டாலின், ஐந்து கட்ட தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' 6-ம் கட்ட பிரச்சாரத்தை, மார்ச் 8, 9 ஆகிய தேதிகளில் மேற்கொள்வார் என நேற்று (மார்ச் 3) திமுக தலைமைக்கழகம் அறிவித்திருந்தது.
» ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்; காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது
இந்நிலையில், அந்த தேதியை மாற்றியுள்ள திமுகதலைமை அலுவலகம், மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் 6-ம் கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்வார் என அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, திமுக தலைமை அலுவலகம் இன்று (மார்ச் 4) வெளியிட்டுள்ள அறிவிப்பு:
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
6 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago