திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு ஏப். 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் இதுவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் பல கட்டங்களாக தொகுதிப் பங்கீடு குறித்து இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (மார்ச் 04) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (மார்ச் 5), வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி அளவில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.
அப்போது, மாவட்டச் செயலாளர்கள் / பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
» வோட்டர் சிலிப் போட்டோ இல்லாத தகவல் சீட்டாக வழங்கப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி திடீர் அறிவிப்பு
மார்ச் 7 அன்று திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டம் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago