பச்சை மலை, பெரிய மலை வழியாக செல்லும் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வன விலங்குகள் கடப்பதற்காக சுரங்கப்பாதை அமைக்கக்கோரிய மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
மணப்பாறையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பச்சை மலை மற்றும் பெரிய மலைப் பகுதிகளுக்கு மத்தியில் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இங்குள்ள வன விலங்குகள் சாலையை கடக்கும் போது வாகனங்கள் மோதி உயிரிழப்பது அடிக்கடி நடைபெறுகிறது.
பச்சை மலை, பெரியமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் 3 இடங்களில் வன விலங்குகள் கடக்க சுரங்கப் பாதை அமைக்க உத்தரவிட வேண்டும்.
இதேபோல் தமிழகம் முழுவதும் வனப்பகுதிக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலை,மாநில நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதையில் வன விலங்குகள் கடக்க தனிப்பாதை அமைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 24-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
6 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago