ராஜபாளையம் அய்யனார்கோயில் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு மலையேற பயிற்சி

By இ.மணிகண்டன்

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான ராஜபாளையம் அய்யனார்கோயில் வனப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு மலை வாழ் மக்கள் மூலம் மலையேற பயிற்சி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உயிர் பண்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார்கோயில், ஆத்திகோயில், வினோபா நகர், தாணிப்பாறை, முழக்கத்தான்பா றை ஆகிய இடங்களில் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதுடன், அவர்களை ஈடுபடுத்தி வனப் பகுதியை பா துகாப்பதும், வனப் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இத்திட்டம் செயல் படுத்தப்படுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலை யில் மழை பெய்யும்போது காட்டாறுகள் வழியாக வரும் அய்யனார் கோயில் ஓடையில் அதிகமாக தண்ணீர் வருவது வழக்கம். அதனால், விடுமுறை நாட்களில் ராஜபாளையம் உ ட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அய்யனார் கோயில் ஓடையில் குளித்து மகிழ்வது வழக்கம்.

இந் நிலையில், அய்யனார் கோயில் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் மலர்கள் பறித்தும், தேன் எடுத்தும், கிழ ங்குகள் தோண்டி எடுத்தும் அதை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும், வன பாதுகாப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் சுற்றுலா பயணி களுக்கான மலையேற்ற பயிற்சி திட்டம் தற்போது தொடங்க ப்பட்டுள்ளதாக வனத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

25 சுற்றுலா பயணிகள் கொண்ட ஒரு குழுவுக்கு மலைவாழ் மக்களே கைடாக செயல்படுவர். ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.50-ம், சிறியவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கட்டணமாக ரூ.25-ம் வசூலிக்கப்படும். இதில், வழிகாட்டியாக செல்லும் நபருக்கு ஊதியமாக ரூ.100 வழங்கப்படும். இதன் மூலம் மலைவாழ் மக்களை உறுப்பினராகக் கொண்டு "சூழல் மேம்பாட்டுக் குழு" அமைக்கப் பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் அய்யனார் கோயில் பகுதியில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள வழுக்குப்பாறை, மாவூத்து, மலைவாழ் மக்கள் வசித்த இடமான பலியன்புடை ஆகிய இடங்களுக்கு அழை த்துச் செல்லப்படுகின்றனர். மலையேற்ற பயணத்தின்போது, செடி, கொடிகள், தாவரங்கள், பூக்கள், பட்டாம்பூச்சிகள், வன உயிரினங்கள் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விளக்கம் அளிக்கப் படுவதாகவும் வனத்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.

சுற்றுலா பயணிகளுக்கான மலையேற்ற பயிற்சியை வன உயிரின பாதுகாப்பு அலுவலர் அசோக்குமார் தொடங்கி வைத்தார்.

மலையேற்ற பயிற்சியில் பங் கேற்ற திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த இளங்கோவன் கூறு கையில், மலையேற்றப் பயிற் சியின்போது உடன் வரும் வழிகாட்டிகள் காட்டின் சிறப்பை எடுத்துக் கூறினர்.

வனத்தைப் பற்றி அறிந்து கொண்டதுடன், அதை பாதுகாப்பதன் அவசியத்தையும் தெரிந்து கொண்டதாகக் கூறினார்.

ராஜபாளையம் அய்யனார் கோயில் பகுதியில் மலையேறச் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வன பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கும் வனத் துறையினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்