குன்னூரில் பழங்குடியினருக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கிய அதிமுகவினர்; 4,500 கோழிக்குஞ்சுகள் பறிமுதல்

By ஆர்.டி.சிவசங்கர்

குன்னூரில் உள்ள பழங்குடியினர் பகுதிகளில் அதிமுகவினர் வீடு, வீடாக கோழிக்குஞ்சுகளை வழங்கினர். தேர்தல் அலுவலர்கள் 4,500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த முதல் நாளே அதிமுகவின் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் வேட்டி, சேலை, தட்டு ஆகிய பரிசுப் பொருட்களை வழங்கினர். இது குறித்த புகார் வந்ததை அடுத்து, உதகை, கோத்தகிரி மற்றும் கூடலூரில் அதிமுக மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இன்று (மார்ச் 03) குன்னூரை சுற்றி உள்ள இருளர் பழங்குடியினர் மற்றும் பேரட்டி, கரன்சி மற்றும் பாரத் நகர் பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் கிராம பகுதிகளில் அதிமுகவினர் வீடு, வீடாக சென்று ஒரு வீட்டுக்கு 10 நாட்டு கோழிக்குஞ்சுகள் மற்றும் ஒரு ஆடு வழங்குவதற்கான டோக்கன்களை வழங்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த சிலர் தேர்தல் அதிகாரிகளுக்குப் புகார் அளித்தனர். புகாரின் பேரில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுவந்த 4,500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து கோழிக்குஞ்சுகளை மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணைக்குக் கொண்டு சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்