சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் தொடர்பான புகார்களை 24 மணிநேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசியில் தெரிவிக்கலாம் என, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இன்று (மார்ச் 03) சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி வெளியீடு:
"இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல், 2021 வருகின்ற 06.04.2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் 24 மணிநேரம் இயங்கக்கூடிய சென்னை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான தங்களுடைய புகார்களை 1800-425-7012 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், cVIGIL செயலி வாயிலாகவும் தெரிவிக்கலாம். மேலும், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வாக்காளர் தொடர்பான விவரங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
» இதெல்லாம் நல்ல தலைமைக்கு அழகா?- ராகுல் காந்தியை விமர்சித்த குஷ்பு
» தொகுதிகளுக்காக திமுகவிடம் இறங்கி போகிறதா காங்கிரஸ்? - கே.எஸ்.அழகிரி பதில்
மேலும், சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி மற்றும் அலுவலக முகவரி கீழ்குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல்-2021-ஐ முன்னிட்டு, கணக்கில் வராத பணப்பரிவர்த்தனைகள் மற்றும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களால் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் பணப்பரிவர்த்தனைகளை கண்காணிக்க சென்னையில் உள்ள வருமான வரித்துறை தலைவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அலுவலகத்தில் 24 மணிநேரம் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சந்தேகத்திற்கு இடமான பணப்பரிவர்த்தனைகள், நகை ஆபரணங்கள் போன்ற விலையுயர்ந்த பொருட்கள் தொடர்பான தகவல்களை 1800-425-6669 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 044-2827 1915 என்ற பேக்ஸ் எண்ணிலும், itcontrol.chn@gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 94453 94453 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தெரிவிக்கலாம் என, கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
15 hours ago