100 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அக்னியாறு கோட்டத்திலிருந்து விடுவித்து, 3 கிலோ மீட்டர் தொலை விலுள்ள கல்லணைக் கால்வாய் கோட்டத்தில் கடையக் குடி பாசனப் பகுதியை இணைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பகுதியில் கடையக்குடி, சோளகம்பட்டி, சுரக்குடிப்பட்டி, திருநெடுங் குளம் ஆகிய பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதிக்கு தேவையான தண்ணீர் காவிரி ஆற்றின் உய்யக்கொண்டான் வாய்க்கால் மூலம் திறக்கப்பட்டு, பல கிலோ மீட்டர் தொலைவு கடந்து, ஆண்டு தோறும் மிக காலதாமதாகவே இப் பகுதிகளுக்கு வந்து சேர்கிறது. மேலும், மழைக்காலங்களில் இப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் சேமிக் கப்படும் தண்ணீர் மூலம் பாசனம் செய்யப்பட்டு வருகிறது.
உய்யக்கொண்டான் வாய்க் கால் மூலம் இப்பகுதிக்கு தண்ணீர் வந்து சேர்வதால், இந்தப் பகுதி பட்டுக்கோட்டையை தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் அக்னியாறு கோட்டத்தில் இணைக் கப்பட்டுள்ளது. காட்டாறு, ஏரி, குளங்களை பராமரிப்பது மட்டும்தான் அக்னியாறு கோட்டத்தில் அடங் கும். ஆனால், கடையக்குடி பகுதியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடம்பங்குடி வழியாக கல்லணைக் கால்வாய் ஆற்றுப் பாசனத்துடன் இந்தப் பகுதியை இணைத்துவிட்டால், உரிய பாசன காலத்தில் தண்ணீர் பெற்று, சாகுபடி செய்ய முடியும். மேலும், கல்லணைக் கால்வாய் ஆற்றின் உபரிநீரை கடையக்குடி ஏரி உள்ளிட்ட பல ஏரிகளில் நிரப்பி, பாசன கட்டமைப்பை மேம்படுத்த முடியும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கடையக்குடியைச் சேர்ந்த மூத்த விவசாயி பாலதண்டா யுதபாணி(92) கூறியதாவது:
எங்கள் பகுதியில் ஏரிகள் அதி கம் உள்ளதால், ஏரியூர் நாடு என அழைக்கப்படுகிறது. உய்யக் கொண்டான் வாய்க்காலிலிருந்து வரும் உபரிநீரையும், மழைநீரையும் கொண்டுதான் பயிர் சாகுபடி செய்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள பாசனம் தொடர்பான குறைபாடுகள், கோரிக்கைகள் குறித்து கருத்துசொல்ல 100 கிலோ மீட்டர் தொலைவுள்ள பட்டுக்கோட்டைக் குத் தான் செல்ல வேண்டும்.
ஆனால், 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கல்லணைக் கால்வாய் ஆற்றுக் கோட்டத்தில் எங்கள் பகுதியை இணைத்தால், பெரும்பகுதி விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
மழைக் காலங்களில் காவிரி ஆற்றிலிருந்து உபரிநீர் கொள்ளிடம் ஆறு மூலம் திறக்கப் பட்டு, கடலில் வீணாகக் கலக்கிறது. இதைத் தடுக்க எங்கள் பகுதிக்கு கல்லணைக் கால்வாயிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய வாய்க்காலை வெட்டினால், உபரிநீரைக் கொண்டு நாங்கள் பாசனம் பெறுவோம்.
இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கால் நூற்றாண்டாக நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்தத் திட்டத்தை அரசு பரிசீலித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “காட்டாறு, ஏரி, குளங்கள் அமைந்துள்ள செங்கிப்பட்டி பகுதி அக்னியாறு கோட்டத்தில் உள்ளது. உய்யக்கொண்டான் கால்வாய் மூலம் இந்தப் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு காலதாமதமாவது உண்மைதான். அதேபோல, இந்தப் பகுதி விவ சாயிகளின் குறைகளை தெரிவிக்க பட்டுக்கோட்டைக்குத்தான் வரவேண்டியுள்ளது.
கல்லணைக் கால்வாயுடன் இணைக்க வேண்டும் என்ற விவ சாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago