ரூ.1 லட்சத்திற்கு மேல் பணப் பரிவர்த்தனை நடந்தால் வங்கி யாளர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வருமான வரித்துறை மற்றும் வங்கியாளர்களுடன் பணப்பரிவர்த்தனை தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல்அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான சந்திர சேகர் சாகமூரி பேசியது: ஒரு வங்கிக் கணக்கில் கடந்த இரண்டு மாதங்களாக பணப்பரிவர்த்தனை ஏதும் நடைபெறாத நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் திடீரென ரூ.1 லட்சத்திற்கு மேல் வங்கிக்கணக்கில் பணப்பரிவர்த்தனை நடந்தால் அதன் விவரங்களை உடன் தெரிவிக்க வேண்டும். ஒரு வங்கிக் கணக்கிலிருந்து பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்கிற்கு ஆர்டிஜிஎஸ் மூலம் பணப் பரிவர்த்தனை நடைபெறும் போது அவைகள் குறித்த தக வல்கள் தெரிவிக்க வேண்டும்.
வேட்பாளர் மற்றும் வேட் பாளரின் குடும்பத்தைச் சார்ந்தோர் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 1 லட்சத்திற்கு மேல் பணப் பரிவர்த்தனை நடந்தால் அதன் விவரங்கள் உடன் தெரிவிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் வங்கிக்கணக்கில் ரூ. 1 லட்சத்திற்கு மேல் வரவு,பற்று செய்யப்பட்டால் அதன் விவரங்கள் உடன் தெரிவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
எஸ்பி அபிநவ், மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, உதவி ஆணையர் (வருமான வரி) ஷாலினி, முன்னோடி வங்கி
மேலாளர் அகிலன், டிஎஸ்பி ஸ்ரீதரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சரஸ்வதி, தேர்தல் வட்டாட்சியர் பாலமுருகன், வங்கி மேலாளர்கள் மற்றும் வங்கி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago