வீடு கட்ட ஆணை வழங்க பணம் கேட்பதாக கூறி வேடந்தவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அருகே பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் பணம் வசூலிப்பதைக் கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை வார்டு உறுப்பினர் நேற்று பூட்டுப் போட்டு பூட்டினார்.

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் வேடந்தவாடி கிராமத்தில் வசிக்கும் 74 பேருக்கு பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வீட்டுக்கு ரூ.2.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். வீடுகள் கட்டும் ஆணை வழங்க ரூ.25 ஆயிரம் தர வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பயனாளிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், வேடந்தவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தை வார்டு உறுப்பினர் சுந்தரம்மாள் நேற்று பூட்டுப் போட்டு பூட்டி தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது அவர், “பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகள், ரூ.25 ஆயிரம் கொடுக்க வேண்டும் என முக்கிய நபர் ஒருவர் வலியுறுத்தி உள்ளார். பணம் கொடுக்காத நபர்களுக்கு வீடுகள் கட்ட ஆணை வழங்கவில்லை.

இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அலுவலக அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அதன் பிறகும் நடவடிக்கை இல்லை. பணம் வசூலிக்காமல் வீடு கட்ட ஆணை வழங்க வேண்டும்” என்றார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.

நடவடிக்கை எடுப்பதாக உறுதி

இது குறித்து துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமியை தொடர்பு கொண்டு கேட்டபோது, “பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொள்ள வேடந்தவாடி கிராமத்தில் 74 பேர் தகுதி பெற்றனர். அவர்களிடம் பணம் கேட்பதாக புகார் வந்துள்ளது. பணம் வசூலிக்காமல் வீடு கட்டும் ஆணைவழங்கப்படும். இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்