கருணாநிதி மீதான எதிர்பார்ப்பை நண்பர் சிறப்பாக நிறைவேற்றுகிறார்: ஸ்டாலினுக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

'கருணாநிதி மீதான எதிர்பார்ப்பை நண்பர் ஸ்டாலின் சிறப்பாக நிறைவேற்றுகிறார்' என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அவர் இன்று காலை அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடம் மற்றும் பெரியார் நினைவிடங்களில் மலரஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், ஸ்டாலினுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் வாழ்த்து தெரிவித்தார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், "விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில், திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என கருத்துக் கணிப்புகள் பல தெரிவித்துள்ள நிலையில், கருணாநிதி மீதான எதிர்பார்ப்பை ஸ்டாலின் நிறைவேற்றி வருவதாக கமல் பாராட்டி வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்