கரோனா தொற்று பரவலைத் தடுக்க மருத்துவர்கள் மற்றும் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி மார்ச் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
கரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ள பயணங்கள் தவிர மற்ற அனைத்து சர்வதேச விமானப் பயணிகளுக்கான தடைகள் தொடரும். கரோனா தடுப்புக்காக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றதல், கிருமி நாசினிகொண்டு கையைக் கழுவுதல் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை மாவட்ட நி்ர்வாகம் கண்காணிக்க வேண்டும்.
கரோனா பாதித்த பகுதிகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். கரோனா தடுப்புக்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றப்படுவதை மாவட்ட நிர்வாகம், காவல்துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.
கரோனா வழிமுறைகள்
மாநிலத்தில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் தேவையான கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.
புதிதாக 479 பேருக்கு வைரஸ் தொற்று
தமிழகத்தில் புதிதாக 479 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதியவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 282, பெண்கள் 197 என மொத்தம் 479 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 182 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 51,542 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை சென்னையில் 2 லட்சத்து 29,603 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 35,024 பேர் குணமடைந்துள்ளனர். 4,022 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முதியவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,496 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் 4,153 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 35,532 கோவையில் 55,755, செங்கல்பட்டில் 52,765, திருவள்ளூரில் 44,230 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. 257 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 74 லட்சத்து 79,572 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago