மத்திய பல்கலைக்கழக இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசியல் கட்சிகள் எங்களை கண்டுகொள்ளவில்லை: தேர்தலில் பிரதிபலிக்கும் என புதுவை மாணவர்கள் தகவல்

By செய்திப்பிரிவு

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத் தில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்துமறுக்கப்பட்டு வரும் சூழலில்அரசியல் கட்சிகள் கண்டுகொள் ளாமல் இருப்பது வரும் தேர்தலில் பிரதிபலிக்கும் வாய்ப்புள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகம் கடந்த 1985-ல் தொடங்கப்பட்ட போது புதுச்சேரியைச் சேர்ந்தோர் படிக்க 25 சதவீத இடஒதுக்கீடு கோரப்பட்டது. பல்கலைக்கழகம் ஆரம்பித்த முதல் 10 ஆண்டுகளில் புதுச்சேரி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. ஆனால் காலப்போக்கில் புதுச்சேரி மாணவர்கள் பல்கலைக்கழகத்தால் பெரிதும் புறக்கணிக்கப்பட்டபோது, புதுச்சேரி மாணவர்களுக்கு தனிஇடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.

இதனை உணர்ந்த அப்போதைய துணைவேந்தர் பேராசிரியர் ஞானம் பல்கலைக்கழக கல்விக்குழுவின் உத்தரவுபடி, புதுச்சேரி கலைக் கல்லூரிகளில் இல்லாத, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பட்டமேற்படிப்புகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 விழுக்காடு ஒதுக்கீடு அளித்து 1997-ம் ஆண்டு உத்தரவிட்டார். அன்றிலிருந்து இந்த இடஒதுக்கீடு முறை அமலுக்கு வந்தது.

அப்போது 8 படிப்புகளுக்கு வழங்கப்பட்ட இந்த ஒதுக்கீடு படிப்படியாக 18 படிப்புகளுக்கு வழங்கப் பட்டது. புதுச்சேரி பல்கலைக்கழகம் 2008-2012 ஆண்டுகளில் நிறைய படிப்புகளைத் தொடங்கியது. ஆனால், அவற்றில் இடஒதுக்கீடு அளிக்கத் தவறிவிட்டது. இதையடுத்து ஆய்வு செய்ய அமைக்கப் பட்ட குழு தனது அறிக்கையில் அனைத்து படிப்புகளிலும் இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்று பரிந் துரைத்தது. ஆனால் அதன்பிறகு வந்த துணைவேந்தர் இந்த முடிவை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் அனுமதிக்கு அனுப்பி வைத்தார். இந்தக் கோப்பு அனுப்பி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் அமைச்சகத்திடம் இருந்துஒரு பதிலும் வரவில்லை.

அண்மையில் ராகுல்காந்தி புதுச்சேரி வந்தபோது, அவரிடம் அப்போதைய முதல்வர் நாராயணசாமி முன்பாகவே, “பல்கலைக் கழகத்தில் தங்களுக்கு இடஒதுக் கீடு கிடைப்பதில்லை” என்று கல்லூரியில் படிக்க விரும்பி இடம் கிடைக்காத பெண்கள் புகார் தெரிவித்தனர்.

இதுபற்றி விசாரித்தபோது, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழ கத்தில் 66-க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 18 பாடப்பிரிவு களில் மட்டுமே புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீதம் வழங்கப் பட்டு வருகிறது. அனைத்து பாடப்பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதம் ஒதுக் கீடு கோரி போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை. கடந்த கல்வி யாண்டுக்கான அறிவிப்பிலும் இடஒதுக்கீடு இல்லை என்பது தெரிய வந்தது.

புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்கள் கூறுகையில், “புதுச்சேரி,காரைக்கால் ஜிப்மரில் 27 சதஇடஒதுக்கீடு புதுச்சேரி மாண வர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் மத்திய பல்கலைக்கழகம் புதுச்சேரியைச் சேர்ந்தோரை நிராகரிக்கிறது. வேலைவாய்ப்பு உள்ள பாடப்பிரிவுகளில் புதுச்சேரி மாணவர்களுக்கு இடஒதுக்கீடுதரப்படுவதில்லை. பல்கலைக்கழக நிர்வாகக்குழு கூட்டத்திலேயே இடஒதுக்கீட்டை முடிவு செய்து அறிவிக்கலாம். ஆனால், மத்தியஅரசுதான் அறிவிக்க வேண்டும் என்கின்றனர். தேர்தல் வாக்குறுதி யில் 25 சத இடஒதுக்கீடு பெற்றுதருவதாக பலரும் தெரிவித்திருந் தனர்.

ஆனால் செய்யவில்லை. தற்போது ஜிப்மரை விட புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கட்டணம் அதிகம். பல போராட்டங்கள் நடத்தியும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தரப்புகள் எங்களை கண்டுகொள்ள வில்லை. இது தேர்தலில் பிரதி பலிக்கும்” என்கின்றனர்.

பல்கலைக்கழங்களிலுள்ள பல்வேறு சங்கப் பிரதிநிதிகள் தரப்பில் விசாரித்தபோது, “ஜிப் மரில் மருத்துவ படிப்புக்கே புதுச் சேரி மாணவர்களுக்கு சரியான இடஒதுக்கீடு தருகிறார்கள். ஆனால், கலை அறிவியல் படிப்புக் கான பல்கலைக்கழகத்தில் ஒருசில பேராசிரியர்கள் செயல்பாட் டால்தான் இடஒதுக்கீடு தருவ தில்லை. இதில் ஆளுநர் தலையிட வேண்டும்” என்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்