சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் பணியில் வெளியூர் வீடியோ கிராபர்களை நியமித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள் வழங்குவதைத் தடுக்க பறக்கும் படைகள், நிலையான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்குழுக்களில் அதிகாரிகள், போலீஸார் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் சாலைகளில் செல்லும் வாகனங்களைச் சோதனையிடுவது, தேர்தல் தொடர்பான புகார்கள் எழும் இடங் களுக்குச் சென்று விசாரணை நடத்துவது போன்ற பணிகளை மேற்கொள்வர். அப்போது சோதனை முழுவதையும் வீடியோ எடுக்க வீடியோகிராபர்கள் நிய மிக்கப்படுகின்றனர்.
இதுதவிர தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,தேர்தல் பார்வை யாளர்கள் உள்ளிட்ட அதிகாரி களுக்கும் வீடியோகிராபர்கள் நியமிக்கப்படுகின்றனர். கடந்த காலங்களில் மாவட்ட அளவில் ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளூர் வீடியோகிராபர்களை நியமித்தனர். ஆனால் இந்த தேர்தலில் வீடியோகிராபர்கள் நியமன ஒப்பந்தத்தை மாநில அளவில் ஒரு தனியார் நிறுவனம் எடுத்துள்ளது.
அந்நிறுவனம் வீடியோ எடுக்க தங்களது பணியாளர்களை நியமித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த உள்ளூர் வீடியோகிராபர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியிடம் புகார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago