மழையால் மதுரை மல்லி கிலோ ரூ.600: விலை அதிகரித்தும் விவசாயிகளுக்கு நஷ்டம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

வடகிழக்குப் பருவ மழையால், மல்லிகைப் பூக்கள் மொட்டிலேயே உதிர்ந்து அழுகி வருவதால், உற்பத்தி சரிந்து கிலோ ரூ.600 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக, தமிழகத் தில் பரவலாக வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. மதுரை மல்லி சாகுபடி செய்யப்படும் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அதிகாலை நேரத் தில் பனிப்பொழிவு அதிகரித்துள் ளது. அதனால் மல்லிச் செடிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் 15 ஆயிரம் ஏக்கரில் மதுரை மல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய மழையால் மாவட்டத்தில் உசிலம்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன் றம், சத்திரப்பட்டி, உசிலம்பட்டி பகுதியிலும், திண்டுக்கல் மாவட் டத்தில் நிலக்கோட்டை, வத்தல குண்டு பகுதியிலும் மல்லிப்பூ செடிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து குள்ளிசெட்டிப் பட்டியைச் சேர்ந்த பாலசந்திரன் கூறியதாவது:

மல்லிகையைப் பொறுத்தவரை விவசாயிகள் ஒரு ஏக்கர் முதல் 10 ஏக்கர் வரை சாகுபடி செய்துள்ளனர். ஒருமுறை நாற்று நட்டால் 20 ஆண்டுகளுக்கு மேல் பலன் தரக்கூடியதால், மல்லிப்பூவை விரும்பி சாகுபடி செய்தோம்.

தற்போது ஒரு ஏக்கருக்கு செடிகளைப் பராமரிக்க ஆண் டுக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. மழை, பனிக் காலத்தில் நோய்த் தாக்கு தலும் அதிகமாகிவிட்டது. அதனால், மருந்தடிக்கும் செலவும் அதிகரித் துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் வடகிழக்குப் பருவமழை பெய்யும் அக்டோபர், நவம்பம், டிசம்பர் மாதங் களில் மல்லிகைப்பூச் செடிகளைக் காப்பாற்றுவதே பெரும்பாடாக உள்ளது. இந்தக் காலத்தில் வரு மானம் இல்லாமல் செடிகளைக் காப்பாற்றினால் மட்டுமே மற்ற காலங்களில் மல்லிப் பூக்களை அறுவடை செய்ய முடியும்.

தற்போது மல்லிப்பூச் செடியில் காய் காய்த்து பூ வெடிப்பதற்கு முன்பே, மழை பெய்ததால் பூ வெடிக்காமல் மொட்டிலேயே கருகி விட்டது. சில இடங்களில் பூத்த மலர்கள், நிறம் மாறி மணம் மாறி விட்டது. பூக்கள் தண்ணீர் குடித்து அழுகுகிறது. அதனால், கடந்த மாதம் கிலோ ரூ.100 முதல் ரூ.200 வரை விற்ற மல்லி, தற்போது ரூ.600 முதல் ரூ.800 வரை விற்கிறது. ஆனால், ஒரு ஏக்கரில் 50 கிலோ பூக்கள் எடுத்த இடத்தில், தற்போது மிகக் குறைந்த அளவாக 50 கிராம் பூக்கள்கூட கிடைக்காததால், விலை உயர்ந்தாலும் நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளது. மல்லிப்பூ விவசாயி களைக் காப்பாற்ற சென்ட் தொழிற்சாலைகள், குளிர்சாதனக் கிடங்குகள் அமைக்க வேண்டும். தென்னைக்கு வறட்சி நிவாரணம் வழங்குவதுபோல மல்லிப்பூ விவசாயிகளுக்கு மழை நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சபரிமலை சீசனால் ரூ.1000 ஆகிறது

மதுரை பூ மார்க்கெட் வியாபாரி ராமச்சந்திரன் கூறும்போது, ’’மதுரை, திண்டுக்கல் மட்டுமல்லாது தருமபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மல்லிப்பூ விளைச்சல் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு நாளுக்கு ஒரு டன் மல்லிப் பூக்களே விற்பனைக்கு வருவதால் கிலோ ரூ.600 ஆக உயர்ந்துள்ளது. இன்று கார்த்திகை 1-ம் தேதி பிறப்பதையொட்டி ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்குகிறது. தொடர்ந்து முகூர்த்த நாட்களும் வருவதால், மல்லிப்பூ தேவை பல மடங்கு அதிகரிக்கும். அதற்கான பூ உற்பத்தி இல்லாததால் ஓரிரு நாளில் மல்லிப்பூ கிலோ ரூ.1,000-ஐத் தொடும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்