‘ஸ்டாலின் அண்ணா வராரு’- பாடலுக்கு நடனமாடி திமுகவினர் தேர்தல் பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

சிவகங்கையில் திமுகவினர் வீதி, வீதியாகச் சென்று ‘ஸ்டாலின் வராரு’ பாடலுக்கு நடனமாடி தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.

தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மூலைமுடுக்கெல்லாம் தேர்தல் திருவிழா களை கட்டத் தொடங்கி உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் கட்சிகள் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளனர்.

அவர்கள் மக்களை கவர்வதற்காக பல்வேறு பாணிகளை கடைபிடித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் மாட்டு வண்டியில் சென்று மனுக்களை பெறுகின்றனர்.

அதிமுகவினர் ஆங்காங்கே நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். திமுகவினரும் தங்கள் பங்குக்கு வித்தியாசமான அணுகுமுறையில் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

சிவகங்கையில் திமுக நகர் செயலாளர் துரை ஆனந்த் தலைமையில், மாவட்டத் துணைச் செயலாளர் மணிமுத்து முன்னிலையில் திமுக நடனக் குழுவினர் வீதி, வீதியாகச் சென்று ‘ஸ்டாலின் அண்ணா வராரு,’ என்ற பாடலுக்கு நடனம் ஆடிப் பிரச்சாரம் செய்தனர்.

மேலும் அவர்களுடன் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்கள், சிறுவர், சிறுமிகளும் நடனம் ஆடினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்