நாங்களும் வலுவாக இருக்கிறோம் எனக் காட்ட..!- தேமுதிகவினர் பைக்குகளில் ஊர்வலம்

By செய்திப்பிரிவு

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேமுதிக போட்டியிட்டது. இதில் ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதன்பிறகு தேமுதிக பெரிய அளவில் போராட்டங்களோ, கட்சி நிகழ்ச்சிகளோ நடத்தாமல் இருந்து வந்தது.

சமீபகாலமாக தேர்தலையொட்டி கட்சி ஆலோசனைக் கூட்டங்களை மகளிரணித் தலைவர் பிரேமலதா நடத்தி வந்தார். இருந்தபோதிலும், அதிமுக தலைமை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தேமுதிகவை அழைக்காமல் இருந்தது.
கடந்த 2011 ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க அதிமுகவும், திமுகவும் காத்திருந்தன. அதேபோல் 2016-ம் ஆண்டு தேர்தலில் கூட தேமுகவுடன் கூட்டணி வைக்க திமுக, பல்வேறு வழிகளில் முயற்சி செய்தது.

ஆனால் தற்போதைய நிலையோ தலைகீழாக உள்ளது. தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கே அதிமுக தலைமை தயக்கம் காட்டியது. பாமக, பாஜக மீது காட்டிய ஆர்வத்தைக் கூட தேமுதிகவிடம் காட்டவில்லை. இதையடுத்து தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென சூசகமாக தேமுதிக தலைமை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இதையடுத்து, அதிமுக நிர்வாகிகள், தேமுதிக நிர்வாகிகள் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் 10 முதல் 14 இடங்களே தேமுதிகவுக்கு ஒதுக்குவோம் என அதிமுக கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அமமுக தலைமையில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. இதில் சேர்வோமா (அ) அதிமுக கூட்டணியிலேயே தொடர்வோமா என்ற குழப்பத்தில் தேமுதிக உள்ளது. மேலும் தேமுதிகவினர் மாநிலம் முழுவதும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மானாமதுரை தனியார் மண்டபத்தில் தேமுதிக ஆலோசனைக்கூட்டம் மாவட்டச் செயலாளர் திருவேங்கடம் தலைமையில் நடந்தது.

இந்தக் கூட்டத்துக்குச் சென்ற தேமுதிகவினர் ‘நாங்களும் வலுவாக இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காக,’ மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாகச் சென்றனர். இதைப் பார்த்த பொதுமக்கள் பெட்ரோல் விற்கிற விலையில மோட்டார் சைக்கிளை எடுக்கவே பயமாக இருக்கு. ஆனால், இவர்கள் பைக்கில் இப்படி ஊர்வலமாக வருகிறார்களே.. கட்சி நிர்வாகிகள் வசதியாகத்தான் இருக்கிறார்கள் போல..! என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்