தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?- கருத்துக் கணிப்பு முடிவு வெளியீடு

By செய்திப்பிரிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. மே 2-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஏபிபி நியூஸ் மற்றும் சி-வோட்டர் நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு:

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 154 முதல் 162 இடங்களையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் திமுக கூட்டணி, தேர்தலில் 41.4% வாக்குகளைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 39.4% வாக்குகளைப் பெற்றது. இப்போதைய கருத்துக்கணிப்பின் படி 2% கூடுதல் வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதிமுக 15.1% வாக்குகளை இழக்கலாம்:

அதேவேளையில், அதிமுக கூட்டணி இந்தத் தேர்தலில் 28.6% வாக்குகளை மட்டுமே பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 தேர்தலில் அதிமுக கூட்டணி 43.7% வாக்குகளைப் பெற்றது. அத்துடன் ஒப்பிட்டால் இந்த ஆண்டு 15.1% வாக்குகளை இழக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சீட் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, அதிமுக கூட்டணி 58 முதல் 66 தொகுதிகளைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மநீமவுக்கு 2 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு:

மக்கள் நீதி மய்யத்துக்கு 2 முதல் 6 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. அமமுக 6.9% வாக்குகளையும், இதர கட்சிகள் 14.8% வாக்குகளையும் பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அமமுக 1 முதல் 5 தொகுதிகளையும், இதர கட்சிகள் 5 முதல் 9 தொகுதிகளையும் கைப்பற்றும் எனவும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது.

புதுச்சேரியில் என்ஆர்.காங்கிரஸுக்கு வாய்ப்பு:

புதுச்சேரியில் அதிமுக, பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 45.8% வாக்குகளைப் பெறும் என்றும், 17 முதல் 21 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்