தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிந்து தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவித்தார்.
தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகள் தலைமையில் கட்சிகள் அணிவகுத்து நிற்கின்றன. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகள் தனியாக நிற்கின்றன. அதிமுக கூட்டணியில் இருந்த சரத்குமார் அதிலிருந்து வெளியேறியதாக அறிவித்துள்ளார். அதேபோன்று திமுக கூட்டணியில் இருந்த ஐஜேகே கட்சியும் வெளியேறியுள்ளது.
அதிமுக கூட்டணிக்குள் வர வன்னியருக்கு 20% உள் இட ஒதுக்கீடு அளிக்கும் கட்சியுடன் கூட்டணி என ராமதாஸ் கூறினார். நேற்று 10.5% உள் ஒதுக்கீட்டு அறிவிப்பை வெளியிட்டு, பாமகவைக் கூட்டணியில் தக்கவைத்தது அதிமுக தலைமை.
10.5% உள் ஒதுக்கீடு காரணமாக சந்தோஷத்தில் இருந்த பாமக தலைவர்கள் இன்று பிற்பகல் நடத்திய பேச்சுவார்த்தையில் 23 தொகுதிகள் பேசி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது அதிமுக தலைமை. இதை அன்புமணி ராமதாஸும் தன்னுடைய பேட்டியில் தெரிவித்தார்.
» விவசாயிகளுக்கு ஆதரவாக வாய் திறக்காத அதிமுக அரசு; கூட்டணி படுதோல்வி அடையும்- பிருந்தா காரத்
கூட்டணி உறுதியானது சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகளும், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட தலைவர்களும் கலந்துகொண்டனர்.
ஒப்பந்தம் பற்றி ஓபிஎஸ் கூறியதாவது:
“அதிமுக-பாமக கூட்டணி அமைத்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதிமுக-பாமக இடையே ஏற்பட்ட ஒப்பந்த அடைப்படையில் அதிமுக கூட்டணியில் அமைந்துள்ள கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொகுதி எண்ணிக்கை மட்டுமே தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இரு கட்சிகளின் நிர்வாகிகளும் உட்கார்ந்து எந்த மாவட்டத்தில் எந்தத் தொகுதி எனப் பேசி முடிவெடுக்கப்படும்”.
இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago