அரசு போக்குவரத்து ஊழியர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்தம்: சென்னையில் பயணிகள் அவதி

By செய்திப்பிரிவு

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்று 3-வது நாளாகத் தொடர்வதால், சென்னையில் மாநகரப் பேருந்துகள் குறைவாகவே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த 25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி, பிற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உட்பட 9 தொழிற்சங்கங்கள் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (பிப். 27) 3-வது நாளாகத் தொடர்கிறது. இதனால், சென்னையில் குறைவாகவே அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையைப் பொறுத்தவரை மாநகரப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகம். ஒரு நாளைக்கு சுமார் 25 லட்சம் பேர் சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிக்கின்றனர். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளை இணைக்கும் வகையிலான மாநகரப் பேருந்துகள், கடந்த 3 நாட்களாகக் குறைந்த அளவிலேயே இயக்கப்படுகின்றன. இதனால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுவதால், பேருந்து நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் சுமார் 700 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேற்று (பிப். 26) 56% பேருந்துகள் இயக்கப்பட்டதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்திருந்தது. ஆனால், இன்று பல வழித்தடங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது.

இதனிடையே, சென்னை டிஎம்எஸ் அலுவலகத்தில், தொழிலாளர் நல ஆணையர் லக்‌ஷ்மிகாந்த் தலைமையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்