வண்ணத்துப்பூச்சிகளின் உருமாற்றம் குறித்து 5-ம் வகுப்பு அறிவியல் பாட புத்தகத்தில் தவறான விளக்கம் கூறப்பட்டுள்ளதாக மதுரை அரசுப் பள்ளி மாணவர்கள் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தனர்.
வானிலை மற்றும் காலநிலையை புரிந்து கொள்வோம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு 23-வது தேசிய மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக மாவட்ட அளவிலான தேர்வு மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 20 அரசு பள்ளிகள், 15 மெட்ரிக் பள்ளிகள், 10 சி.பி.எஸ்.இ பள்ளிகள் என மொத்தம் 150 அறிவியல் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. 400 மாணவர்கள் கலந்து கொண் டனர்.
ஆய்வுக்காக நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள முத்துப் பட்டி பல்கலைக்கழக அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் காலநிலைகளும், பள்ளி வளாக பூச்சிகளும் என்ற தலைப்பை தேர்வு செய்தனர். இந்த அணியில் 2 மாணவர்கள், 3 மாணவிகள் இடம் பெற்றிருந்தனர். வண்ணத்துப்பூச்சிகளின் வளர்ச்சி நிலை குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். 5-ம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் கூறப்பட்டிருந்த செய்முறை விளக்கத்தை மாணவர்கள் உபயோகித்தனர். ஆனால், அவற்றை உபயோகித்து பார்த்தபோது வண்ணத்துப்பூச்சி உருமாறவில்லை. எனவே, புத்தகத்தில் தவறான தகவல் இடம் பெற்றிருப்பதாக மாணவர்கள் தாங்கள் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரையில் கூறியிருந்தனர்.
இது குறித்து ஆசிரியை மலர்செல்வி கூறியது:
வாயகன்ற கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள். வண்ணத்துப்பூச்சி முட்டையுடன் கூடிய எருக்கஞ்செடி யின் இலையை பாட்டிலில் போடுங்கள். பின்பு மெல்லிய துணியால் பாட்டிலின் வாயை கட்டுங்கள். முட்டைகள் முழு வண்ணத்துப்பூச்சியாக வெளிவரும் வரை நாள்தோறும் பாட்டிலை உற்றுநோக்குங்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
இதை செய்து பார்த்தோம். முட்டை, லார்வா, கூட்டுப்புழு ஆகிய நிலைகளை கடந்து வண்ணத்துப்பூச்சியாக உருமாற 28 முதல் 30 நாள் ஆகும். எருக்கஞ்செடியின் இலையானது ஒரு வாரத்தில் காய்ந்து போகிறது. எனவே முட்டையை எடுத்து பாட்டிலில் வைத்து பரிசோதித்தபோது வண்ணத்துப்பூச்சியாக உருவாகவில்லை. கூட்டுப்புழுவாக மாறிய 4 நாட்களுக்கு பின்னர் பாட்டிலில் வைத்தால்தான் வண்ணத்துப்பூச்சியாக உருமாறுகிறது. ஆனால், புத்தகத்தில் முட்டையை எடுத்து பரிசோதித்தால் வண்ணப்பூச்சி உருவாகிறது என தவறான தகவல் இடம் பெற்றுள்ளது.
வண்ணத்துப்பூச்சிகளின் இனப்பெருக்கமானது செப்டம்பர் மாதத்துக்கு பின்னர் தான் நடைபெறுகிறது. ஆனால் முதல் பருவத்தேர்வு புத்தகத்திலேயே வண்ணத்துப்பூச்சி குறித்த தகவல் இடம் பெற்றுள்ளதால் மாணவர்கள் பெரும்பாலும் செய்முறை செய்வதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago