கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களையும் வருவாய் துறையினர் பூட்டி சீல் வைத்தனர். ஆனால் விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் சீல் வைக்கப்படவில்லை.
தேர்தல் தேதி நேற்று மாலைஅறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தது.
இதையடுத்து கடலூர் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சந்திரசேகர் சாகமூரி தேர்தல் நடத்தை விதிமுறையின் படி, அறிவிக்கப்பட்டிருந்த அரசு சார்பு நிகழ்ச்சிகள்,குறைதீர் கூட்டங்கள்,நலத்திட்டஉதவிகள் வழங்கும் நிகழ்வுகளை ரத்து செய்துள்ளார். மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர் அலு வலகங்களையும் பூட்டி சீல் வைக்க வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத் தினார். இதை தொடர்ந்து, வட்டாட்சியர்கள் அந்தந்த தொகுதியில் உள்ள சட்டப்பேரவைஉறுப்பினர் அலுவல கங்களை பூட்டி சீல் வைத்தனர்.இருப்பினும் விருத்தாசலம் சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகம்பூட்டி சீல் வைக்கப் படவில்லை எனக் கூறப்பட்டது. இதையடுத்து விருத்தாசலம் சார்-ஆட்சியர் பிரவீனிடம் கேட்டபோது, "சட்டப் பேரவை உறுப்பினர் ஊரில் இல்லை. இருப்பினும் தேர்தல் நடத்தை விதிமுறையின் படி அவர் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும் கட்சியின் சின்னங்கள் அடங்கிய தோரணங்கள் பல்வேறு பகுதியில் அமைக்கப்பட்டிருந்தன. அந்த தோரணங்களையும் கட்சியினர் மாலையில் அப்புறப் படுத்தினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
35 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago