இரண்டாம் நாளாக தொடரும் வேலை நிறுத்தம் போக்குவரத்து தொழிலாளர்கள் நூதன போராட்டம்: பேருந்து கண்ணாடிகளை உடைத்ததாக 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இரண்டாம் நாளாக குறைந்த எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகளை இயக்கியதால் வேலை, வியாபாரம் நிமித்தமாக வெளியூர் செல்பவர்கள் அவதிப் பட்டு வருகின்றனர். வேலூரில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட 9 தொழிற்சங்கத்தினர் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அரசுப் பேருந்துகள் இயக்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. குறைந்த எண் ணிக்கையில் பேருந்துகளை இயக்குவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வேலூர் மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 10 சதவீதம் எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பிற்பகல் தொடங்கி இரவு நேரங்களில் முக்கிய வழித்தடங்களில் பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் சிரமப் பட்டு வருகின்றனர். ஓட்டுநர்கள் பற்றாக்குறை காரணமாக தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பேருந்துகளை இயக்கி வரு கின்றனர். பேருந்துகளின் எண் ணிக்கை குறைவாக இருப்பதால் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள், தொழில் நிமித்தமாக வெளியூர் செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நூதன போராட்டம்

வேலூர் கிருஷ்ணா நகர் போக்குவரத்து பணிமனை முன்பாக தொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது, வயிறு மற்றும் நெற்றியில் நாமம் போட்டு பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கோவிந்தா... கோவிந்தா... என கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

3 பேர் கைது

வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த இறைவன்காடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 3 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் பள்ளிகொண்டா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். நள்ளிரவில் ரோந்து சென்றபோது கந்தனேரி தேசிய நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த 3 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்த கற்களை பறிமுதல் செய்து விசாரித்ததில், மூவரும் அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் என தெரிய வந்தது.

தொடர் விசாரணையில், அவர்கள் அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சரவணன் (42), ஊணை வாணியம்பாடியை சேர்ந்த ஓட்டுநர் செந்தில்குமார் (37), நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த நடத்துநர் தனஞ்செழியன் (50) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

முடிவுக்கு வரும் போராட்டம்

இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘‘போக்குவரத்து அமைச்சரிடம் தொழிற்சங்க நிர்வாகிகள் கடந்த 25-ம் தேதி இரவு பேசி யுள்ளனர். அப்போது, இடைக்கால நிவாரணம் அறிவிக்கப்பட்டது தொடர்பாக பேசியுள்ளனர். கோரிக்கைகள் தொடர்பாக முதல்வரிடம் பேசுவதாக அமைச்சர் கூறியுள்ளார். இதில், நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இடைக்கால நிவாரண தொகை உயர்த்தி வழங்க வாய்ப்புள்ளதால் வேலை நிறுத்தப் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்’’ என தெரிவித்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட் டத்தில் 2-வது நாளாக அரசுப் போக்குவரத்துக் கழக தொழி லாளர்கள் நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அரசுப் பேருந்துகள் முழுமையாக இயங்கவில்லை. முதல் நாளில் 30 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், 2-வது நாளான நேற்று அதற்கும் குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப் பட்டுள்ளன. வேலூர், விழுப் புரம் என முக்கிய நகரங்களுக்கு ஓரிரு பேருந்துகள் மட்டுமே இயக் கப்பட்டன. வெளியூர்களுக்கு இயக்கப்படவில்லை.

இதேபோல், உள்ளூர் பேருந்து சேவையும் முடங்கியது. பள்ளி மற்றும் பணிக்கு செல்பவர்களை கருத்தில் கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு சில பேருந்துகள் இயக்கப்பட்டன.

தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால், பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி பணி மனைகள் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்