வேலூர் சரகத்துக்கு உட்பட்ட வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் பணியாற்றும் 55 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஐஜி காமினி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் வேலூர் சரகத்துக்கு உட்பட்ட 55 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து டிஐஜி காமினிஉத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூர் தெற்கு ஆய்வாளர் லதா,திமிரிக்கும், வேலூர் கிராமிய ஆய்வாளர் கருணாகரன், சத்துவாச்சாரிக்கும், அங்கு ஏற்கெனவே பணியாற்றிவந்த புனிதா, அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்துக்கும், வேப்பங்குப்பம் பாலசுப்பிரமணியன் தேசூருக்கும், லத்தேரி கோவிந்தசாமி போளூருக்கும், குடியாத்தம் கிராமிய ஆய்வாளர் பார்த்தசாரதி தி.மலை நகரத்துக்கும், வேலூர்மகளிர் ஆய்வாளர் நிர்மலா உமராபாத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
குடியாத்தம் மகளிர் ஷியாமளா கீழ்பென்னாத்தூருக்கும், வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு நாகராஜன், திருவண்ணாமலை குற்றப்பிரிவுக்கும், வேலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக ஆய்வாளர்சரஸ்வதி, திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பகத்துக்கும், வேலூர் பணியிடை பயிற்சி மைய ஆய்வாளர் நிலவழகன் வேட்டவலத்துக்கும், மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் இலக்குவன் வேலூர் நக்ஸல் தடுப்புப் பிரிவுக்கும், அங்கு ஏற்கெனவே பணியாற்றி வந்த ஜனார்த்தனன் கலசப்பாக்கத்துக்கும், வேலூர் மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவின் 3 காவல் ஆய்வாளர்கள் அன்பரசி திருவண்ணாமலை மகளிர், கலையரசி வேலூர் தெற்கு காவல் நிலையம், கவிதா லத்தேரிக்கும், குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் சோனியா, தெள்ளாறுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஆற்காடு நகர ஆய்வாளர் ஆனந்தன் வேலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்துக்கும், திமிரி சுரேஷ்பாபு குடியாத்தம் கிராமியத்துக்கும் அரக்கோணம் நகரம் கோகுல்ராஜன் அரக்கோணம் கிராமியத்துக்கும், அங்கு ஏற்கெனவே பணியாற்றி வரும் அண்ணாதுரை தூசி காவல் நிலையத்துக்கும், பாணாவரம் பாரதி அரக்கோணம் கலால் பிரிவுக்கும், காவேரிப்பாக்கம் லட்சுமிபதி பாணாவரத்துக்கும், அரக்கோணம் மகளிர் ஆய்வாளர்கிருஷ்ணவேனி குடியாத்தம் கலால் பிரிவுக்கும், உமராபாத் நிர்மலா திருவண்ணாமலை கலால்பிரிவுக்கும், ஆலங்காயம் நாகராஜன் வாணியம்பாடி கிராமியத் துக்கும், ஜோலார்பேட்டை உலகநாதன் ஐஎஸ்டிசி பிரிவுக்கும், கந்திலி உலகநாதன் வேப்பங்குப்பத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மகளிர் ஆய்வாளர் ஜெயலட்சுமி வாணியம்பாடி மகளிர் காவல் நிலையத்துக்கும், ஆம்பூர் மகளிர் செந்தில்குமாரி, வேலூர் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கும், திருவண்ணாமலை நகரம் சந்திரசேகரன் திருவண்ணாமலை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுக்கும், கீழ்பென்னாத்தூர் மகாலட்சுமி காவேரிப்பாக்கத்துக் கும், வேட்டவலம் ராஜாராம் ஆலங்காயத்துக்கும், வெறையூர் ராஜலட்சுமி வந்தவாசி மகளிர் காவல் நிலையம், போளூர் திருநாவுக்கரசு காட்பாடிக்கும், கலசப்பாக்கம் சசிகுமார் கண்ணமங்கலத்துக்கும் அங்கு பணியாற்றி வந்த விநாயக மூர்த்தி ஆற்காடு நகரத்துக்கும், செய்யாறு முரளிதரன் அரக் கோணம் நகரத்துக்கும், தேசூர் மணிமாறன் கந்திலிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
தெள்ளார் அல்லிராணி வேலூர் கிராமியத்துக்கும் தி.மலை மாவட்ட குற்ற ஆவண காப்பகம் கவிதா, எஸ்சிஎஸ்-1 பிரிவுக்கும் தி.மலை மாவட்ட குற்றப்பிரிவு நிவாஸன் செய்யாறுக்கும், தி.மலை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு அனிதா, வேலூர் மகளிர் காவல் நிலையத்துக்கும், வேலூர் மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவுக்கு தி.மலை மகளிர் ஆய்வாளர் லட்சுமி, செய்யாறு கலால் ஆய்வாளர் பேபி மற்றும் காத்திருப்போர் பட்டியலில் இருந்து பிரேமா ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர்.
வந்தவாசி மகளிர் ஆய்வாளர் கவுரி திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்துக்கும், போளூர் (மகளிர்) ராணி ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்துக்கும், செய்யாறு (மகளிர்) அழகுராணி வெறையூர் காவல் நிலையத்துக்கும் தி.மலைநகரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜோதி போளூர் மகளிர் காவல்நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள் ளனர். வேலூர் சரகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த அமுதா செய்யாறு (மகளிர்), நந்தினிதேவி குடியாத்தம் (மகளிர்), லட்சுமி ஜோலார்பேட்டை காவல் நிலையத்துக்கும் வேலூர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் அபர்ணா, வேலூர் மாவட்ட சைபர் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago