அரசு மருத்துவமனையில் இறந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் டான்சில் அறுவை சிகிச்சைக்கு பிறகு கோமா நிலைக்கு சென்று இறந்த 8 வயது சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தமிழ்செல்வி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

என் மகள் சங்கீதா (8). டான்சில் அறுவை சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் 16.4.2016- ல் சேர்த்தோம். அறுவை சிகிச்சை நடந்தது. சிறிது நேரத்தில் என் மகள் மயக்க நிலைக்கு சென்றார்.

மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர்.

தொடர்ந்து 83 நாட்கள் கோமாவில் இருந்த நிலையில் கடந்த 5.7.2016ல் சங்கீதா இறந்தார். அறுவை சிகிச்சையின் போது அதிகளவில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் என் மகள் கோமா நிலைக்கு சென்று உயிரிழந்துள்ளார். இதனால் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிட்டார்.

பின்னர் நீதிபதி, மனுதாரரின் மகள் டான்சில் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவருக்கு வேறு உடல் நல பிரச்சினை இல்லை.

அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து கோமா நிலைக்கு சென்று உயிரிழந்துள்ளார். இதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இதனால் மனுதாரருக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்