தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வரும் 27, 28-ம் தேதிகளில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி அடுத்தகட்டமாக தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
இதற்காக வரும் 27-ம் தேதி காலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்திறங்கும் அவர், வஉசி கல்லூரியில் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடுகிறார்.
பின்னர் அங்கிருந்து குரூஸ்பர்னாந்து சிலை வரையில் திறந்த வேனில் செல்கிறார். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம், நாசரேத் வழியாக சாத்தான்குளம் செல்கிறார்.
நாசரேத்தில் கிறிஸ்த ஆலயத்துக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. சாத்தான்குளத்திலிருந்து திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரிக்கு மாலையில் வந்து சேருகிறார்.
நாங்குநேரியில் தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் அருகேயுள்ள திடலில் மாலை 4.30 மணி முதல் 6 மணிவரையில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று பேசுகிறார்.
கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதற்கான மேடை அமைப்புப் பணிகளை ரூபி மனோகரன் தொடங்கி வைத்தார்.
பொதுக்கூட்டத்துக்குப்பின் திருநெல்வேலி வண்ணார்பேட்டையிலுள்ள தனியார் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுக்கும் ராகுல்காந்தி, அடுத்த நாள் (28-ம் தேதி) பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் காலை 9 மணிக்கு பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடுகிறார்.
இந்த கலந்துரையாடலில் பங்கேற்க விரும்பும் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவு மாநில துணை தலைவர் காமராஜை 9791459655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த கலந்துரையாடலுக்குப்பின் திருநெல்வேலி டவுனுக்கு செல்லும் ராகுல்காந்தி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலில் தரிசனம் செய்கிறார்.
அங்கிருந்து டவுன் காந்திசிலை வரை ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார். அங்கிருந்து தென்காசி மாவட்டம் ஆலங்குளம், சுரண்டை, புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்கிறார். அடுத்த நாள் (மார்ச் 1) கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல்காந்தி பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
ராகுல்காந்தியின் பிரச்சார சுற்றுப்பயண ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago