பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று புதுச்சேரி வருகிறார். பிரதமர் வருகையையொட்டி நகரெங்கும் போக்குவரத்து மாற்றப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் பங் கேற்கும் நிகழ்வுக்காக ஜிப்மரில் துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆய்வு செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணியளவில் ஜிப்மர் வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று, பல்வேறு புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, லாஸ் பேட்டையில் பாஜக பொதுக் கூட் டத்தில் பங்கேற்கிறார்.
ஆளுநர் ஆய்வு
பிரதமர் நிகழ்வு நடக்கும் ஜிப் மர் கருத்தரங்கு கூடத்துக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை நேரில் நேற்று சென்று ஆய்வு செய்தார். அனைத்து ஏற்பாடுகளும் சரியாக உள்ளதா எனப் பார்வையிட்டார். ஜிப்மர் மருத்துவனையில் பாது காப்பு ஏற்பாடுகளை புதுவை டிஜிபி ரன்வீர்சிங் கிருஷ்ணியா, ஏடிஜிபி ஆனந்தமோகன், சீனியர் எஸ்பி பிரதிக்ஷா கோத்ரா ஆகி யோர் ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளபத்திரிக்கையாளர் உட்பட அனை வருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் வருகையையொட்டி லாஸ்பேட்டை, விமான நிலைய சாலை, கிழக்கு கடற்கரை சாலை, காமராஜர் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணிக்காக கமாண்டன்ட் ரவீந்திரன் தலைமையில் 120 அதிவிரைவு படையினர் புதுவைக்கு வந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா மேடை, பொதுக்கூட்ட மேடை போலீஸார் கட்டுப் பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் மேடையில் அமர உள்ள மத்திய அமைச்சர் அர்ஜூன் மேக்வால் உட்பட பாஜக நிர்வாகிகளுக்கு கரோனா பரிசோதனை நடத் தப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரச்சார பாடல் வெளியீடு
பாஜக பொதுக்கூட்ட மேடை பகுதியில் புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளர்களான நிர்மல்குமார் குரானா, இணைப்பொறுப்பாளர் ராஜூவ் சந்திரசேகர் எம்.பி ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், "புதுச்சேரியில் பாஜக சார்பில் சட்டப் பேரவைத் தேர்தல் பணிகள், கிளைகள் வாரி யாக தொடங்கி நடைபெற்று வரு கிறது.
‘காங்கிரஸ் இல்லாத புதுச்சேரி - வளர்ச்சியான புதுச்சேரி’ என்ற கோஷங்களுடன் தேர்தல் பிரசாரம் நடக்கிறது.
இதன் ஒரு பகுதியாக பாஜக சார்பில் தேர்தல் பிரசார பாடல் வெளியிட்டுள்ளோம். பிரதமர் மோடியின் சாதனைகள் குறித்து இந்த பிரசாரப் பாடல் புதுச்சேரிக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இனி இந்த பிரசாரப் பாடல்கள் புதுவையில் ஒளிபரப்பாகும். லாஸ்பேட்டையில் நடைபெறுவது பாஜக தேர்தல் கூட்டம். இதில், கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை" என்றனர்.
உடன் புதுவை மாநில பாஜகதலைவர் வி.சாமிநாதன் உள்ளிட் டோர் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago