சுபாஷ் பண்ணையார் மீது வெடிகுண்டு வீச ஒத்திகை பார்த்த கூலிப் படையினர்- பிடிபட்ட 3 பேர் மதுரை சிறையில் அடைப்பு

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் பிடிபட்ட நெல்லை யைச் சேர்ந்த பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் 3 பேர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

சுபாஷ் பண்ணையார், அவரது கூட்டாளிகளை வெடிகுண்டு வீசிக் கொலை செய்ய, கடந்த ஒரு வாரமாக அவர்கள் திண்டுக்கல்லில் ஒத்திகை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

திண்டுக்கல் அருகே காமலா புரத்தில் திங்கள்கிழமை சுபாஷ் பண்ணையாரின் கூட்டாளிகள் மீது கார், லாரி மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்து வெடிகுண்டு களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில், நெல்லை மாவட் டம் ராமையன்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜன், மேலக்கரை யைச் சேர்ந்த விஜயபாண்டி, தச்சநல்லூரைச் சேர்ந்த மணி ஆகிய 3 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இவர்களை, செவ்வாய்க்கிழமை நிலக்கோட்டை அரசு மருத்துவ மனையில் மருத்துவப் பரிசோதனை செய்து, நிலக்கோட்டை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் 3 பேரும் மதுரையில் அடைக்கப்பட்டனர். இவர்கள், நெல்லையைச் சேர்ந்த கூலிப் படையினர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

அவர்கள் மேலும் தெரிவிக்கை யில், ‘கடந்த ஒரு மாதமாகவே சுபாஷ் பண்ணையார், அவரது கூட்டாளிகளின் நடவடிக்கை யைக் கண்காணித்தோம். அவர் களின் இருப்பிடத்தைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், நீதிமன்றத்துக்கு வரும் போது மட்டுமே, அவர்களைக் கொலை செய்ய முடியும் என்ப தால், அவர்கள் நீதிமன்றத்துக்கு வந்துவிட்டு ஊருக்குத் திரும்பிச் செல்லும்போது வெடிகுண்டு வீச முடிவு செய்தோம். இதற்காக, நேரில் சென்று எந்த இடத்தில் அவர்கள் வரும் வாகனத்தின் மீது வெடிகுண்டு வீசலாம், அதில் தப்பிவிட்டால், அடுத்து என்ன செய்யலாம் என ஒத்திகைக் கூட நடத்திப் பார்த்தோம். கடைசியில் திட்டம் தோல்வியில் முடிந்தது’ எனத் தெரிவித்தனர்.

‘நீதிமன்றத்துக்கு வரும் போது மட்டுமே, அவர்களைக் கொலை செய்ய முடியும் என்பதால் பின்தொடர்ந்தோம்.’

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்