மணல் கடத்தலைத் தடுப்பது தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவுகளை அதிகாரிகள் கண்டிப்பான முறையில் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகாவில் நெறிஞ்சிக்குடி, சேரனூர், சித்தூர், கூடலூர், காரசூரம்பட்டி கிராம மக்கள் தங்கள் கிராமங்களில் நடந்த வரும் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்கக்கோரி உயர் நீதிமன்ற கிளை நிர்வாக நீதிபதி எம்.எம்.சுந்தரேஷூக்கு கடிதம் அனுப்பினர்.
இந்தக் கடிதத்தை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்து விசாரித்தது.
இந்த மனுவை விசாரித்து தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா அமர்வு பிறப்பித்த உத்தரவு:
» அலங்காநல்லூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு கேலரி: மதுரை ஆட்சியர் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
» முதல்வர், திமுக தலைவர் பிரச்சாரத்தால் தென் மாவட்டங்களில் கட்சித் தொண்டர்கள் உற்சாகம்
தமிழகத்தில் மணல் கடத்தலை தடுப்பது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுகளை கண்டிப்பான முறையில் அமல்படுத்த வேண்டும்.
சட்டவிரோத மணல் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.
மணல் பொது வளம். இதை பாதுகாக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக தலைமைச் செயலர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மணல் கடத்தலை தடுக்கும் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இது தொடர்பாக தலைமை செயலர் நீதிமன்றத்தில் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வா தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago